கோவை: மரம் சாய்ந்து பெரும் விபத்து தவிர்ப்பு !

X
கோவை - பாலக்காடு சாலையில், குனியமுத்தூர் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் சாலையோரம் இருந்த ஒரு மரம் சாய்ந்த சி.சி.டி.வி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மரம் சாய்ந்த சமயத்தில் நேற்று அவ்வழியே வந்த ஒரு கார் சரியான நேரத்தில் பிரேக் போட்டு நிறுத்தப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மழைக்காலத்தை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம் சார்பில் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மரம் விழுதல் அல்லது மின்சார வயர்கள் அறுந்து விழுதல் போன்ற சம்பவங்கள் நடந்தால், உடனடியாக அவற்றை அப்புறப்படுத்த குழுவினர் தயாராக இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோவையின் பல்வேறு பகுதிகளில் தற்போது சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையைச் சமாளிக்க, தண்ணீர் தேங்குவதைத் தவிர்க்கும் பணிகளில் மாநகராட்சி சார்பில் 300-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Next Story

