சேலம் ஜாகீர் ரெட்டிப்பட்டியில் பொதுமக்களிடம்

X
சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 1-வது வார்டு ஜாகீர் ரெட்டிப்பட்டி பகுதி பொதுமக்களை அருள் எம்.எல்.ஏ. சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் அப்பகுதியில் நிலவும் அடிப்படை பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார். அதன்பிறகு இண்டேன் நகர் பகுதியில் குறைகளை கேட்க சென்றபோது, அப்பகுதி மக்கள் பாதாள சாக்கடை அமைக்கும்போது, நடுரோட்டில் குழி பறித்து ஸ்டோரேஜ் டேங்க் அமைப்பதாகவும், இது தங்களுக்கு மிகப்பெரிய இடையூறாக இருப்பதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து அருள் எம்.எல்.ஏ. உடனடியாக பாதாள சாக்கடை அமைக்கும் நிறுவனத்தை தொடர்பு கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அமைத்து கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும், பொதுமக்களின் தேவைகளை உரிய அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி தீர்த்து வைப்பதாகவும் தெரிவித்தார். அப்போதும், செய்து கொடுக்கவில்லை என்றால் பகுதி மக்கள் ஒன்று திரண்டு மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாகவும் அருள் எம்.எல்.ஏ. தெரிவித்தார். அப்போது, பா.ம.க. பகுதி செயலாளர் ஈஸ்வரன், தலைவர் செந்தில்குமார், பழனியப்பன், பிரகாஷ், டிவிசன் தலைவர் மோகன், பகுதி இளைஞரணி நிர்வாகி தமிழரசன், வெங்கடேஷ், சரவணன், பாலு மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Next Story

