சேலத்தில் மாற்றுக்கட்சியினர் தி.மு.க.வில் இணைந்தனர்

X
சேலம் மாவட்டம் ஓமலூர், கருப்பூர் பகுதிகளில் இருந்து மாற்றுக்கட்சியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் தி.மு.க.வில் இணையும் விழா நேற்று புதிய பஸ்நிலையம் அருகில் உள்ள கலைஞர் மாளிகையில் நடைபெற்றது. இதற்கு சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. அவைத்தலைவர் சுபாசு தலைமை தாங்கினார். அமைச்சர் ராஜேந்திரன் முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களுக்கு அமைச்சர் பொன்னாடை அணிவித்து கட்சியில் இணைத்து கொண்டார். அப்போது அமைச்சர் பேசும் போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏழை, எளிய மக்களுக்கு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பெண்களுக்கு இலவச பஸ் பயணம், மகளிர் உரிமைத்தொகை, புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை பெண்கள் முன்னேற்றத்திற்கு வழங்கி வருகிறார். எனவே தமிழகத்தில் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்க புதிதாக கட்சியில் சேர்ந்து உள்ளவர்கள் பாடுபட வேண்டும் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ரகுபதி உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

