ஏற்காட்டில் சாலையில் மரக்கிளைகள் முறிந்்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X
ஏற்காடு சுற்றுவட்டார பகுதிகளில் பனிமூட்டமும், சில நேரங்களில் மழையும் பெய்து வருகிறது. இதனால் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை 6.30 மணி அளவில் ஈச்சங்காடு பகுதியில் உள்ள புங்க மரத்தின் கிளைகள் முறிந்து சாலையில் விழுந்தன. இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால் அந்த பாதையில் மின்சார ஒயர்கள் அறுந்து விழுந்தன. மேலும் அதே பகுதியில் 2 மின்கம்பங்களும் சாலையோரம் சாய்ந்தன. இதனால் சேர்வராயன் கோவில், கரடி பாயிண்ட், சக்கர மகாமேரு கோவில் போன்ற இடங்களுக்கு சென்று கொண்டு இருந்த சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். இதையடுத்து சுற்றுலா பயணிகள் மஞ்சைகுட்டை வழியாக மாற்றுப்பாதையில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலை துறையினர் மற்றும் மின்வாரியத்துறையினர் விரைந்து வந்து சாலையில் விழுந்த மரக்கிளையை வெட்டி அப்புறப்படுத்தினர். பின்னர் அவர்கள் போக்குவரத்தை சீரமைத்தனர். தொடர்ந்து சாய்ந்த மின்கம்பத்தை மின்வாரிய ஊழியர்கள் சீரமைத்தனர்.
Next Story

