ஏற்காட்டில் கோடை விழாவை காண ஏராளமானவர்கள் குவிந்தனர்.

X
ஏற்காட்டுக்கு தமிழகம் மட்டும் அல்லாமல் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். அப்படி வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கோடை விழா மே மாத இறுதியில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு கோடை விழா கடந்த 23-ந் தேதி தொடங்கியது. விழாவையொட்டி அண்ணா பூங்காவில் 1½ லட்சம் பூக்களால் பல்வேறு வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். மேலும் ஏற்காட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க தினமும் பல்வேறு விளையாட்டு போட்டிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் நேற்று 3-வது நாளாக செல்லப்பிராணிகள் கண்காட்சி நடந்தது. இதில் பல்வேறு இன நாய்கள், குதிரைகள், பறவைகளை அதன் உரிமையாளர்கள் பங்கு பெற செய்தனர். இதில் உள்ளூரில் இருந்து மட்டும் அல்லாமல் வெளியூர்களில் இருந்தும் ஏராளமானவர்கள் தங்களது செல்லப்பிராணிகளுடன் கலந்து கொண்டனர். நாய்கள் கண்காட்சியில் அல்சேஷன், ஜெர்மன் ஷெப்பர்ட், டாபர்மேன், லேபர் டாக், பக், பாக்சர், காக்கர் ஸ்பேனியல் டேசன்ட், கிரேட் டன் டால்மேஷன், ராட்வீலர், பெல்ஜியம் செப்பர்ட், கோல்டன் ரெட்ரீவர், பீகல், ஷிட்சு, டெரியர் போன்ற வெளிநாட்டு இன நாய்களும் கோம்பை, ராஜபாளையம், சிப்பிப்பாறை, போன்ற நாட்டு இன நாய்களும் பங்கேற்றன.
Next Story

