அரியலூரில் ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவித்து பாரதிய ஜனதாவினர் ஊர்வலம்.

அரியலூரில் ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவித்து பாரதிய ஜனதாவினர் ஊர்வலம்.
X
அரியலூரில் ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவித்து பாரதிய ஜனதாவினர் ஊர்வலம் நடத்தினர்.
அரியலூர், மே.26- அரியலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் தேசியக்கொடி ஊர்வலம் பாஜக மாவட்டத் தலைவர் டாக்டர் பரமேஸ்வரி ஆனந்தராஜ் தலைமையில் நடைபெற்றது. ஊர்வலத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயராமன், முன்னாள் பாஜக மாவட்ட தலைவர் அய்யப்பன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் அய்யாரப்பன், நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பஹல்காம் தாக்குதலை கண்டித்தும், தீவிரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலில் வெற்றி பெற்ற இந்திய ராணுவ வீரர்களுக்கும், பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக ஊர்வலம் நடத்தப்பட்டது. ஊர்வலமானது அரியலூர் ஒற்றுமை திடலில் தொடங்கி முக்கிய வீதிகளின் வழியாக அண்ணா சிலை அருகே வந்து முடிவடைந்தது. இதில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் காளிராஜ் மருது சுப்பிரமணியம் இளையராஜா மாவட்ட பொருளாளர் சிவகுமார் மற்றும் பாஜக மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செயலாளர் மணிவண்ணன் நன்றி தெரிவித்தார்.
Next Story