கரூரில்,வைகாசி திருவிழா- இன்று மாரியம்மன் தேரோட்டம் நடைபெற்றது.
கரூரில்,வைகாசி திருவிழா- இன்று மாரியம்மன் தேரோட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் புகழ்பெற்ற ஆலயமான கரூர் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி மாத திருவிழா ஆண்டு தோறும் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வைகாசி திருவிழாவை காண கரூர் மற்றும் பல்வேறு மாவட்டத்தில் இருந்தும் இந்த திருவிழாவை காண ஆண்டுதோறும் ஆலயம் வருகை புரிந்து மனம் உருகி கரூர் மாரியம்மனை வழிபட்டு வருகின்றனர். வைகாசி மாத திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று ஆலயத்தில் இருந்து மாரியம்மன் தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு ஆலயத்தின் பரம்பரை அறங்காவலர் முத்துக்குமார் தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார். ஆலயத்தில் இருந்து புறப்பட்ட மாரியம்மன் தேரோட்டம் முக்கிய வீதியில் வழியாக வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் வந்தடைந்தது. ஆலயம் வந்தடைந்த மாரியம்மன் தேருக்கு ஆலய சிவாச்சாரியார் மகா தீபாராதனை காட்டிய பிறகு, கூடியிருந்த அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதங்களை வழங்கினார்.
Next Story





