வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தவெக அலுவலகம் மற்றும் நீர் மோர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது.

வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தவெக அலுவலகம் மற்றும் நீர் மோர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தவெக அலுவலகம் மற்றும் நீர் மோர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது. திருப்பத்தூர் கிழக்கு மாவட்டம் ஆம்பூர் சட்டமன்ற தொகுதி மாதனூர் மேற்கு ஒன்றியம் வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அலுவலகம் மற்றும் நீர் மோர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது. இணை செயலாளர்.பி. வெங்கடேஸ்வரன், அவர்கள் அனைவரும் வரவேர்த்தார். செயலாளர்.கிஷோர் ,பொருளாளர்.அர்ஜுன்,துணைச் செயலாளர்.விஜய் ரேகா, தலைமை தாங்கினார்கள். இதில் சிறப்பு அழைப்பாளராக தவெக தமிழக வெற்றிக் கழகம் திருப்பத்தூர் மாவட்ட கிழக்கு செயலாளர்.வி.நவீன்குமார்,அவர்கள் மற்றும் திருப்பத்தூர் கிழக்கு மாவட்ட இணை செயலாளர். சி.சரவணன்,அவர்கள் ஆம்பூர் நகர செயலாளர்.மதன், அவர்கள் கலந்து கொண்டு தவெக அலுவலகம் குத்துவிளக்கு ஏத்தி திறந்து வைத்தார்கள் அங்கு உள்ள நிர்வாகிகள் பொதுமக்களுக்கு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்கள். பின்னர் தண்ணீர் பந்தல் நீர்மோர்,இளநீர் மற்றும் பழங்கள் பொதுமக்களுக்கு சுமார் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. செயற்குழு உறுப்பினர்.கோவிந்தராஜ்,மதன்குமார், ஹரிஷ் அவர்கள் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தவெக நிர்வாகிகள் மாவட்ட தலைவர்களுக்கு சால்வை மற்றும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் உள்ளாட்சி பிரதிநிதிகள் கிளை வட்டம் மாவட்டம் செயலாளர் பொருளாளர் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டனர். முடிவில் தவெக நிர்வாகி மேற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் துணை செயலாளர் ரவிசங்கர், பொருளாளர் சுமன், துணை செயலாளர் புனிதா, இளைஞர் அணி செயலாளர் ராஜு இளைஞர் அணி துணைச் செயலாளர் தேன்மொழி மற்றும் திருப்பத்தூர் கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு லோகேஷ் இறுதி நன்றி கூறினார்.
Next Story