கூடலூர் அருகே சட்ட விரோதமாக புகையிலை விற்றவர் கைது

X
கூடலூர் தெற்கு காவல் நிலைய போலீசார் குற்றத்தடுப்பு சம்பந்தமாக நேற்று (மே.25) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்பொழுது அப்பகுதியைச் சேர்ந்த ஞானமணி (74) என்பவர் அவரது பெட்டிக்கடையில் சட்டவிரோதமாக புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. கடையில் இருந்த புகையிலை பார்க்கட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் ஞானமணி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Next Story

