பொதுக்குழு கூட்டம் நடைபெறும் இடத்தை ஆய்வு செய்த அமைப்புச் செயலாளர்கள்

மதுரையில் நடைபெற உள்ள திமுக பொதுக்குழு கூட்டம் அரங்கத்தை அமைப்புச் செயலாளர் நேற்று ஆய்வு செய்தார்
திமுக தலைவர் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் தலைமையில் ஜூன் 1ஆம் தேதி தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் மதுரையில் உத்தங்குடி பகுதியில் நடைபெறுகிறது. இதற்காக தலைமைக் கழகத்தின் வழிகாட்டுதல்படி உத்தங்குடியில் உள்ள கலைஞர் திடலில் அனைத்து ஏற்பாடுகளும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. அவற்றை நேற்று திமுக இணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆலோசனைகளை வழங்கினார். உடன் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
Next Story