முன்னூற்று பாளையத்தில் மின்சாரம் தாக்கி வட மாநில வாலிபர் உயிரிழப்பு.
முன்னூற்று பாளையத்தில் மின்சாரம் தாக்கி வட மாநில வாலிபர் உயிரிழப்பு. மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர் ஜிதேந்திரர் உரேவ் வயது 30.எலக்ட்ரீசியன். இவர் வேலாயுதம்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட3 பாளையத்தில் இளங்கோவன் என்பவர்க்கு சொந்தமான புதிய வீடு கட்டுமான பணி நடக்கும் இடத்தில் பணி மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் மே 24ஆம் தேதி மாலை 6:45 மணி அளவில் பணியில் ஈடுபட்டிருந்த வேலையில் , எதிர்பாராத விதமாக மின் வயரை மிதித்து விட்டார். இதனால் மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்ட அவர் கீழே விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஜிதேந்திர உரவ் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அறிந்த அவரது சகோதரி வீரக்குமாரி வயது 22 என்பவர் அளித்த புகாரின் பேரில் , சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் , உயிரிழந்த ஜிதேந்திரர் உரவ் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அதே மருத்துவமனை சவகிடங்குக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.
Next Story





