திருமருகல் வரதராஜ பெருமாள் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு

திருமருகல் வரதராஜ பெருமாள் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு
X
பெருமாளுக்கு மகா அபிஷேகம், தீபாராதனை - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
நாகை மாவட்டம் திருமருகலில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், அமாவாசை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதன்படி, நேற்று அமாவாசையை முன்னிட்டு, வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அப்போது, வரதராஜபெருமாளுக்கு, மஞ்சள் பொடி, சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், பன்னீர் உள்ளிட்டவைகளால் மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, வரதராஜபெருமாள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Next Story