குரங்கணி சாலையில் இருசக்கர வாகன விபத்து இருவர் உயிரிழப்பு
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சக்கமநாயக்கன்பட்டி கீரை கடை தெரு பகுதியில் வசித்து வருபவர்கள் ஆகாஷ் குமார் (19) மற்றும் பாண்டி (25) இருவரும் போடி அருகே உள்ள குரங்கணி பகுதியில் நண்பர்களுடன் சென்று அப்பகுதியில் குளிக்க சென்றுள்ளனர் ஆகாஷ் குமார் பாண்டி ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருக்கும் பொழுது நிலை தடுமாறி மழைக்காலங்களில் செல்வதற்காக கட்டி மழை நீர் தொட்டியில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் உள்ளே விழுந்ததில் இருவரும் சம்பவ இடத்திலேயே தலையில் பலத்த காயத்துடன் உயிரிழந்தனர் இதனை அறிந்த போடி குரங்கணி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . உயிரிழந்த இரு இளைஞர்கள் உடலையும் பிரேத பரிசோதனைக்காக போடிநாயக்கனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இரு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
Next Story




