ஆனந்தபுரத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது

X
அனந்தபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரோட்டரி சமுதாய குழுமம் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் யோக பிரியா தலைமை தாங்கினார்.டாக்டர் கனிமொழி முன்னிலை வகித்தார். ரோட்டரி சமுதாய குழுமம் முன்னாள் தலைவர் ஜேசு ஜூலியஸ் ராஜா முகாமை துவக்கி வைத்தார். ரத்ததானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ் வழங்கினர். ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் ரத்த தானம் வழங்கினர்.-சுகாதார ஆய்வாளர்கள் அன்புமாறன், இளங்கோ மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள், மக்களைத் தேடி மருத்துவ பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story

