ஜெயங்கொண்டம் அருகே பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்

ஜெயங்கொண்டம் அருகே பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்
X
ஜெயங்கொண்டம் அருகே பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
அரியலூர் மே.27- ஜெயங்கொண்டம் அருகே பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர். ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் கிராமத்தில் நேற்று காலை மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பொது மக்களுக்கு அச்சுறுத்தும் வகையிலும் இடையூறாகவும் 2 அடி நீளம் உள்ள கத்தியை கையில் வைத்துக்கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்தவரை அவரை தடுத்து விசாரணையில் ஈடுபட்ட போது அவர் கோரியம்பட்டி கிராமத்தை சேர்ந்த பாலுச்சாமி மகன் பிரபாகரன் என்கிற பாபா பிரபாகரன் (30) என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றார்.
Next Story