செம்மொழி நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கட்டுரை, பேச்சுப்போட்டி

முத்தமிழறிஞரின் தமிழ்த்தொண்டின் பெருமையையும் மாணவர்களிடம் உணர்த்திடும் வகையில் ஆண்டுதோறும் அனைத்து மாவட்டங்களிலும் 11, 12ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசு மற்றும் பாரட்டுச் சான்றிதழ்
செம்மொழி நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் ** தலைவர் கிரேஸ் பச்சாவ் வழங்கினார்.. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், செம்மொழி நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கிடையே நடத்தப்பட்ட கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் இன்று (26.05.2025) வழங்கினார்.. “தமிழுக்கு செம்மொழித் தகுதி பெற்றுத் தந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெருமையைப் போற்றிடும் வகையில் அவர் பிறந்த நாளான சூன் திங்கள் 3ஆம் நாள் தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் செம்மொழிநாள் விழாவாகக் கொண்டாடப்பட உள்ளது. செம்மொழியின் சிறப்பையும் முத்தமிழறிஞரின் தமிழ்த்தொண்டின் பெருமையையும் மாணவர்களிடம் உணர்த்திடும் வகையில் ஆண்டுதோறும் அனைத்து மாவட்டங்களிலும் 11, 12ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசு மற்றும் பாரட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.. அதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்டத்தில் 11ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்கள், மற்றும் கல்லூரி மாணவர்களுக்கிடையே மாவட்ட அளவிலான கட்டுரைபோட்டி, பேச்சுப் போட்டிபெரம்பலூர், பாரத சாரண, சாரணியர் பயிற்சி மையத்தில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் நடத்தப்பட்டது. மாவட்ட அளவில் பள்ளி அளவிலான பேச்சுப் போட்டியில் பெரம்பலூர் மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியில் (உடும்பியம்) பதினொன்றாம் வகுப்பு பயிலும் செ.பார்க்கவி என்ற மாணவி முதல் பரிசினையும், மேலப்புலியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் ச.சுபஸ்ரீ என்ற மாணவி இரண்டாம் பரிசினையும், ஆருத்ரா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு பயிலும் கு.ஜெயஸ்ரீ என்ற மாணவன் மூன்றாம் பரிசினையும், கட்டுரை போட்டியில் அந்தூர் செயின்ட்பால் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயிலும் சி.விஷ்ணுசிவா என்ற மாணவன் முதல் பரிசினையும், பெரம்பலூர் மாவட்ட அரசு மாதிரிப் பள்ளி பனிரெண்டாம் வகுப்பு பயிலும் ம. இந்துமதி என்ற மாணவி இரண்டாம் பரிசினையும், பெரம்பலூர் தந்தை ரோவர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயிலும் செ. சிற்பகலா என்ற மாணவி மூன்றாம் பரிசினையும் வென்றுள்ளனர். கல்லூரி மாணவர்களுக்கிடையே நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுகலை தமிழ் இரண்டாமாண்டு பயிலும் ந. காருண்யா என்ற மாணவி முதல் பரிசினையும், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுகலை தமிழ் முதலாமாண்டு பயிலும் மா. கெளசல்யா என்ற மாணவி இரண்டாம் பரிசினையும், தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் மின்னனு மற்றும் தொலை தொடர்பு துறை பயிலும் மு. பி. ஹரினிஸ்ரீ என்ற மாணவி மூன்றாம் பரிசினையும், கட்டுரை போட்டியில், பெரம்பலூர் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிக மேலாண்மை துறை இரண்டாமாண்டு பயிலும் பா. அபிநயா என்ற மாணவி முதல் பரிசினையும், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை தமிழ் இலக்கியம் மூன்றாமாண்டு பயிலும் ஆ, அபிநயா என்ற மாணவி இரண்டாம் பரிசினையும், இளையர் தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரியில் கல்வியியல் பயிலும் கு.ஐஸ்வர்யா என்ற மாணவி மூன்றாம் பரிசினையும் வென்றுள்ளனர். முதல் பரிசு வென்ற மாணவர்களுக்கு ரூ.10,000 காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும், இரண்டாம் பரிசு வென்ற மாணவர்களுக்கு ரூ.7,000 காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும், மூன்றாம் பரிசு வென்ற மாணவர்களுக்கு ரூ.5,000 காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். மேலும், மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்பார்கள். மாநில அளவில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு சென்னையில் 03.06.2025ஆம் நாளன்று நடைபெறவுள்ள செம்மொழிநாள் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிச் சிறப்பிக்க பெறுவர். இந்நிகழ்வில், தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் (பொ) க.சித்ரா மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story