நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம், ரயில் நிலையங்களில் போர்வை வழங்கிய குழு

X
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது.இதன் காரணமாக வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது. இந்த நிலையில் இரவு நேரங்களில் குளிர் காற்று அதிகமாக வீசுவதால் நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆதரவற்றவர்களுக்கு நெல்லை மக்கள் நல நண்பர்கள் குழுவினர் இன்று போர்வை வழங்கினர்.இதற்கான ஏற்பாட்டை குழு ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் செய்திருந்தார்.
Next Story

