தொடர் மழை காரணமாக பாலத்திற்கு கீழ் கடல் போல் காட்சி அளிக்கும் மழை நீர் வாகன ஓட்டிகள் பெரும் அவதி .

தொடர் மழை காரணமாக பாலத்திற்கு கீழ் கடல் போல் காட்சி அளிக்கும் மழை நீர் வாகன ஓட்டிகள் பெரும் அவதி .
X
மழை காலங்களில் எச்சரிக்கை பலகைகளை அமைத்திட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை .
தொடர் மழை காரணமாக பாலத்திற்கு கீழ் கடல் போல் காட்சி அளிக்கும் மழை நீர் வாகன ஓட்டிகள் பெரும் அவதி . மழை காலங்களில் எச்சரிக்கை பலகைகளை அமைத்திட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை . நீலகிரி மாவட்டத்திற்கு நேற்றும் இன்றும் மிக அதிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது இதில் நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மிக முதல் கன மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இரவில் இருந்தே தொடர் மழை பெய்து கொண்டிருக்கும் காரணத்தினால் உதகை படகு இல்லம் செல்லும் சாலையில் அமைந்திருக்கும் ரயில் பாலத்திற்கு கீழ் தேங்கி இருந்த மழை நீர் கடல் போல் காட்சியளிப்பதால் வாகனங்கள் மற்றும் அரசு பேருந்துகள் செல்வதற்கு பெரும் அச்சமடைந்து வருகின்றனர் சாலையைக் கடந்து செல்ல வாகனங்கள் பல மணி போராட்டத்திற்கு பின்பு செல்ல முடிகிறது எனவும் மழைக்காலங்களில் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் இந்த வழியில் செல்ல வேண்டும் சென்றால் கவனமாக செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றது. மேலும் சம்பந்தப்பட்ட துறை இதைத்தான் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு அந்த சாலையின் நுழைவாய் பகுதியில் எச்சரிக்கை பலகைகள் அமைத்திட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.
Next Story