மேற்கு தொடர்ச்சி மலையின் நீர்பிடிப்பு பகுதிகளில் இந்த கனமழை பெய்து வரும் நிலையில் அவலாஞ்சி எமரால்ட் ஆப்பர் பவானி பகுதிகளில் கன மழை பெய்து வந்ததால் நீரோடலையில் வெள்ளப்பெருக்கு

நீரோடைகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டதால் விளை நிலங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மலை காய்கறிகள் சேதம்.......................
மேற்கு தொடர்ச்சி மலையின் நீர்பிடிப்பு பகுதிகளில் இந்த கனமழை பெய்து வரும் நிலையில் அவலாஞ்சி எமரால்ட் ஆப்பர் பவானி பகுதிகளில் கன மழை பெய்து வந்ததால் நீரோடலையில் வெள்ளப்பெருக்கு ....................... நீரோடைகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டதால் விளை நிலங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மலை காய்கறிகள் சேதம்....................... நீலகிரி மாவட்டத்தில் இன்றும் நாளையும் அதி கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், நீர்பிடிப்பு பகுதிகளான அவலாஞ்சி, எமரால்டு, அப்பர்பவானி மற்றும் பைகாரா உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர்பிடிப்பு பகுதிகளில் நீர் வரத்து அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில், நீர்பிடிப்பு பகுதிகளில் நீர வரத்து அதிகமான காரணத்தினால் நீரோடைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நஞ்சநாடு, கப்பத்தொரை, பாலாடா உள்ளிட்ட பகுதிகளிலுள்ள நீரோடைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட நிலையில், மலைக் காய்கறி பயிர்களான கேரட், பீட்ரூட், உருளை கிழங்கு உள்ளிட்ட காய்கறி விவசாயம் பயிரிடப்பட்டுள்ள விவசாய நிலங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான விளை நிலங்களில் பயிரிடப்பட்ட காய்கறிகள் சேதமடைந்துள்ளன. மேலும் கடந்த இரண்டு வருடங்களாக நீரோடைகளை தூர் வாராமல் இருப்பதே இதற்கு காரணம் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
Next Story