ஸ்ரீ துலுக்கானத்தம்மன் ஆலயத்தில் வைகாசி அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

ஆரணி டவுன் கண்ணகி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ துலுக்கானத்தம்மன் ஆலயத்தில் வைகாசி அமாவாசை ஊஞ்சல் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கண்ணகி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ துலுக்கானத்தம்மன் ஆலயத்தில் வைகாசி அமாவாசை ஊஞ்சல் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. மேலும் வைகாசி அமாவாசை தினத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஊஞ்சல் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது மேலும் இதில் ஸ்ரீ துலுக்கானத்தம்மன் ஊஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள் பாலித்தார் இதில் சுற்றி உள்ள பகுதிகளிலிருந்து பெண்கள் மற்றும் பக்தர்கள் என திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
Next Story