கிருஷ்ணகிரி அருகே கஞ்சா வைத்திருந்தவர் கைது.

கிருஷ்ணகிரி  அருகே கஞ்சா வைத்திருந்தவர் கைது.
X
கிருஷ்ணகிரி அருகே கஞ்சா வைத்திருந்தவர் கைது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுகிறதா என்று போலீசார் கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில் கிருஷ்ணகிரி மதுவிலக்கு அமலாக்கபிரிவு போலீசார் வரமலைகுண்டா பகுதியில் சோதனை செய்தனர். அப்போது அங்கு சந்தேகம்படும்படி நின்ற ஒருவரை பிடித்து சோதனையிட்ட போது அவர் 150 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. மேலும் போலீசார் விசாரணையில் அவர் அந்த பகுதியை சேர்ந்த பாப்போதான் (50) என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story