பள்ளி மாணவனுக்கு தொல்லை. போக்சோவில் வாலிபர் கைது.

X
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறையை சேர்ந்த ஜெயச்சந்திரன் மகன் பட்டாசு பாலு என்ற தங்க பாலமுருகன் (26) என்பவர் திருமணமாகாதவர். அதே பகுதியை சேர்ந்த 8ம் வகுப்பு படிக்கவுள்ள 12 வயது மாணவனுக்கு நேற்று முன்தினம் (மே.25) இரவு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். இச்சம்பவம் குறித்து மாணவன் பெற்றோரிடம் கூறி அழுதுள்ளான். இது குறித்து காடுபட்டி போலீசாரிடம் புகார் அளித்தனர். சிறுவனிடம் போலீசார் தனிப்பட்ட முறையில் நடத்திய விசாரணையில் சம்பவம் உண்மை தெரியவந்தது. இதையடுத்து போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்த போலீசார், தங்கபாலமுருகனை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், மாஜிஸ்திரேட் உத்தரவின் அடிப்படையில் சிறையில் அடைத்தனர்.
Next Story

