ஜோலார்பேட்டை அருகே தந்தையை கொன்றவரை பழி தீர்த்த மகன்! கொலை நடந்த ஒரு மணி நேரத்தில் கொலையாளிகளை சுற்றி வளைத்து கைது செய்த போலீசார்

X
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே அடுத்தடுத்து அரங்கேறிய கொலைகள்! சொத்து பிரச்சனை காரணமாக மாமனை வெட்டிக்கொன்ற மச்சான்!! பழிக்குப் பழிவாங்க தந்தையை கொன்றவரை பழி தீர்த்த மகன் கொலை நடந்த ஒரு மணி நேரத்தில் கொலையாளிகளை சுற்றி வளைத்து கைது செய்த ஜோலார்பேட்டை போலீசார் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம்பட்டி பகுதியைச் சேர்ந்த சக்கரவர்த்தி இவரது மகன் திம்மராயன் (48) ரியல் எஸ்டேட் வேலை செய்து வந்தார். இவருடைய அக்கா மகன் சக்கரவர்த்தி என்பவருக்கும் நில சம்மந்தமான பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த பிப்ரவரி 17 தேதி அன்று ஜோலார்பேட்டை அருகே காந்தி நகர் பகுதியில் உள்ள நிலத்தில் வாழை தோப்பில் திம்மராயன் இருந்தபோது அவரை பின்தொடர்ந்து வந்த சக்கரவர்த்தி தான் மறைத்து வைத்திருந்த அறிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். பின்னர் ஒன்பது நாட்களுக்குப் பின்னர் போலீசார் சக்கரவர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் சில தினங்களுக்கு முன்பு ஜாமினில் வெளிய வந்த சக்கரவர்த்தியை மர்ம நபர்கள் நோட்டமிட்டதாக வந்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் இன்று காஞ்சிபுரத்தில் உள்ள காவல் நிலையத்தில் கையெழுத்து போட இன்று சக்கரவர்த்தியும் அவருடைய மனைவி கௌரி ஆகிய இருவரும் செல்ல இருந்தனர். அப்போது பொன்னேரி பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு வெளியே வந்தபோது அங்கு இவர்களை நோட்டமிட்ட ஸ்கார்பியோ காரில் வந்த மர்ம நபர்கள் ஐந்து பேர் கண்ணிமைக்கும் நேரத்தில் சக்கரவர்த்தியை சாராமாரியாக வெட்டி சாய்த்தனர் இதனை தடுக்கச் சென்ற கௌரிக்கும் சுண்டுவிரலில் வெட்டு விழுந்தது. பின்னர் இருவரும் மயங்கிய நிலையில் அங்கிருந்து மர்ம நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பெயரில் ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரையும் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். சக்கரவர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் மேலும் இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட இடத்தை திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார். ஜோலார்பேட்டை போலீசார் கொலை நடந்த ஒரு மணி நேரத்தில் கொலையாளிகளை சுற்றி வளைத்து கைது செய்தனர் தந்தையை கொன்றவரை பழி தீர்த்த மகன் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Next Story

