ஊத்தங்கரை: மின்தடையை கண்டித்து மனு அளித்த பொதுமக்கள்.

X
கிருஷ்ணகிரி மாவட் டம் ஊத்தங்கரை இந்திரா நகர் பகுதியில் கடந்த சில மாதங்களாக தொடர் மின்சாரம் தடை ஏற்பட்டு வருகிறது. இது குறித்து பலமுறை ஊத்தங்கரை மின்சார அலுவலகத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்க வில்லை என்று அந்த பகுதியில் தொடர்ந்து மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனை நேற்று கண்டித்து நேற்று காலை இந்திரா நகர் பொதுமக்கள் மின்சார அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். இதை அறிந்த மின் செயற்பொறியாளர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக வந்த பொதுமக்களிடையே பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு கூடிய விரைவில் இந்த மின்தடை பிரச்சினையை தீர்த்து வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்தார். இதனால் பொதுமக்கள் மின் செயற்பொறியாளரிடம் மனு அளித்து சென்றனர்.
Next Story

