சேலத்தில் புகையிலை பொருட்கள் விற்ற முதியவர் கைது

X
சேலம் மாசிநாயக்கன்பட்டி குயவன் காடு பகுதியை சேர்ந்தவர் நசீர் அகமது (வயது 61). இவர் புகையிலை பொருட்கள் விற்பனை செய்து வருவதாக அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் மற்றும் போலீசார் நேற்று அவருடைய வீட்டுக்கு சென்று சோதனையிட்டனர். அப்போது வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நசீர் அகமதுவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர் பெங்களூருவில் இருந்து பார்சல் சர்வீஸ் மூலம் புகையிலை பொருட்களை வாங்கி மாநகரில் உள்ள பல்வேறு பெட்டி கடைகளுக்கு புகையிலை பொருட்களை விற்று வந்தது தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்து ரூ.73 ஆயிரத்து 880 மதிப்பிலான 91 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story

