பட்டு கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச வீடு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்.

X
ஆரணியில் திருவண்ணாமலை பட்டு கைத்தறி நெசவாளர்கள் சங்கம் சார்பில் கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச வீடு வழங்கக்கோரி ஆரணி பழைய பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தி பின்னர் ஊர்வலம் சென்றனர். தமிழக அரசு கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டத்திற்கு மாநில அரசு 60 சதவீதமும், மத்திய அரசு 40 சதவீதமும் சேர்த்து ஒரு நெசவாளருக்கு ரூ.4லட்சம் இத்திட்டத்திற்கு ஒதுக்கிட கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறையினரால் 2023 ஆம் ஆண்டு அரசு ஆணை வெளியிடப்பட்டும் இதுநாள் வரை மத்திய அரசு ஒப்புதல் வழங்கவில்லை என்றும் ஆகையால் மத்திய அரசு ஒப்புதல் வழங்கி நிதி ஒதுக்கிட கோரியும், திருவண்ணாமலை மாவட்டத்தில் இத்திட்டத்தில் இதுவரை எத்தனை நெசவாளர்களுக்கு இலவச வீடு வழங்கியுள்ளனர் என்ற பட்டியலை வழங்க வேண்டும் என்றும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரணி பழைய பஸ்நிலையம், எம்ஜிஆர் சிலை ஆர்ப்பாட்டம் செய்தனர். திருவண்ணாமலை பட்டு கைத்தறி நெசவாளர்கள் சங்க தலைவர் இ.இளங்கோ தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் எம்.வீரபத்திரன், சிஐடியு இரா.பாரி, சிஐடியு கே.காங்கேயன், சிபிஎம் சி.ரமேஷ்பாபு, சிஐடியு மாவட்ட பொருளாளர் எஸ்.முரளி, கைத்தறி சங்க பொருளாளர் வி.குமார், சிஐடியு நிர்வாகிகள் சி.அப்பாசாமி, பி.கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Next Story

