பணியின் போது விபத்தில் மரணம் அடைந்த தனியார் நிறுவன ஊழியருக்கு இ.எஸ்.ஐ. உதவித்தொகை

X
பெரம்பலூர் அஸ்வின்ஸ் ஹோம் சிறப்பு நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றியவர் ராஜா பெரியண்ணன். இவர் கடந்த ஆண்டு பணியின் போது விபத்தில் மரணம் அடைந்தார். இவருடைய குடும்பத்திற்கு மாதம் ரூ.21 ஆயிரத்து 545 உதவித்தொகை வழங்க சேலம் இ.எஸ்.ஐ. துணை மண்டல அலுவலக இணை இயக்குனர் சிவராமன் உத்தரவின் பேரில் துணை இயக்குனர் தினேஷ்குமார் ஆணை பிறப்பித்தார். இதையடுத்து திருச்சி கிளை மேலாளர் ரேவதி அந்த ஆணையை, மறைந்த ராஜா பெரியண்ணன் குடும்பத்திற்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அஸ்வின்ஸ் நிர்வாக இயக்குனர்கள் டாக்டர் கே.ஆர்.வி.கணேசன், செல்வகுமாரி, மனித வளத்துறை அதிகாரி மணிபாரதி உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

