கோவை: பாதிக்கப்பட்ட வாழை மரங்களுக்கு இழப்பீடு- முத்துச்சாமி

கோவை: பாதிக்கப்பட்ட வாழை மரங்களுக்கு இழப்பீடு- முத்துச்சாமி
X
கோவையில் பெய்யும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் தவிர்க்கப்பட்டதாக வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துச்சாமி தெரிவித்துள்ளார்.
கோவையில் பெய்யும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் தவிர்க்கப்பட்டதாக வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துச்சாமி தெரிவித்துள்ளார். நேற்று மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேட்டுப்பாளையம், வால்பாறை போன்ற பகுதிகளில் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். மழை நிலவரம் குறித்து தகவல் அறிந்தவுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து இடங்களையும் ஆய்வு செய்ய உத்தரவிட்டதாகவும், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், கண்காணிப்பு அதிகாரி உள்ளிட்ட அனைத்து அரசுத் துறை அதிகாரிகளுக்கும் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன என்றும் அமைச்சர் முத்துச்சாமி விளக்கினார். இந்த மழையால் கோவையில் 8 வீடுகள் மட்டுமே பாதிக்கப்பட்டதாகவும், அதில் காயமடைந்த இருவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த முறை பெய்த மழையின் அனுபவத்தைக் கருத்தில் கொண்டு பல இடங்களில் சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும், மழையால் பாதிக்கப்பட்ட வாழை மரங்களுக்கு ரூ. 23 லட்சம் இழப்பீடு வழங்க மாவட்ட ஆட்சியர் முன்மொழிவு அனுப்பியுள்ளதாகவும், நிதி வந்ததும் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அமைச்சர் முத்துச்சாமி உறுதி அளித்தார்.
Next Story