செல்லூர் ராஜை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த மனு

X
இந்திய ராணுவத்தை தரக்குறைவாக பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்ததால் ராணுவத்தினர் கொதித்துப் போய் உள்ளனர். முன்னாள் ராணுவ வீரர் நாயர் அசோசியேசன் செயலாளர் ராஜு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: இந்திய ராணுவத்தை தரை குறைவாக பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, கர்னல் சோபியா குரோஷியை பாகிஸ்தான் சகோதரி என தரக் குறைவாக பேசிய மத்திய பிரதேச மாநில அமைச்சர் விஜய் ஷா, இந்திய ராணுவம் மோடியின் காலடியில் உள்ளது என பேசிய மத்திய பிரதேச துணை முதல்வர் ஜெகதீஷ் தேவடா ஆகியோரை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடத்த போலீசாரிடம் அனுமதி கேட்டு இருந்தேன். ஆனால் போலீசார் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி மறுத்துவிட்டனர். இது அநீதியானது. சம்பந்தப்பட்டவர்கள் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும். அதனால் ராணுவ வீரர்கள் கொதித்துப் போய் உள்ளனர். ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வேண்டும் எனக் கூறியிருந்தார்.
Next Story

