அகில இந்திய கூடைப்பந்து கால் இறுதி போட்டியில் பெண்கள் பிரிவில்கேரளா போலீஸ் அணியும் ,ஆண்கள் பிரிவில் ஐஓபி சென்னை அணியும் வெற்றி

அகில இந்திய கூடைப்பந்து கால் இறுதி போட்டியில் பெண்கள் பிரிவில்கேரளா போலீஸ் அணியும் ,ஆண்கள் பிரிவில் ஐஓபி சென்னை அணியும் வெற்றி
அகில இந்திய கூடைப்பந்து கால் இறுதி போட்டியில் பெண்கள் பிரிவில்கேரளா போலீஸ் அணியும் ,ஆண்கள் பிரிவில் ஐஓபி சென்னை அணியும் வெற்றி கரூர் கூடைப்பந்து குழு சார்பில், எல்.ஆர்.ஜி. நாயுடு சுழற்கோப்பைக்கான, 65வது ஆண்டு அகில இந்திய கூடைப்பந்து போட்டி கடந்த, 22 முதல், திருவள்ளுவர் மைதானத்தில் நடந்து வருகிறது. இன்று இரவு இறுதி போட்டி நடைபெற உள்ளது நேற்று இரவு நடந்த கால் இறுதி போட்டியில் பெண்கள் அணியில் சதர்ன் இரயில்வே அணியும் ,கேரளா போலீஸ் அணியும் மோதின. வெற்றி பெறும் முனைப்போடு இரு அணிகளும் போட்டி போட்டு புள்ளிகளை சேர்த்தனர். இதில், 55 க்கு 52 என்ற புள்ளிக்கணக்கில் கேரள போலீஸ் அணி வெற்றி பெற்றது. இதே போல ஆண்கள் பிரிவில் இந்தியன் வங்கி அணியும் ,ஐஓபி சென்னை அணியும் மோதின. இதில், 82க்கு 78 என்ற புள்ளிக்கணக்கில் ஐஓபி சென்னை அணி வெற்றி பெற்றது.
Next Story