புதுவை: நெடுஞ்சாலையில் பைக் மீது கார் மோதி விபத்து!

விபத்து செய்திகள்
புதுக்கோட்டை, திருமயம் அரசு தலைமை மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி திருமயத்தில் இருந்து புதுக்கோட்டையை நோக்கி நேற்று காரில் சென்றுள்ளார். அப்போது திருமயம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட பைக் மீது கார் மோதியதில் கார் நெடுஞ்சாலை அருகில் உள்ள பள்ளத்தில் விழுந்தது. இதில் மருத்துவர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து திருமயம் காவல்துறையினர் விசாரணை.
Next Story