கோவை: பெரியார் பெயரை சாதியுடன் குறிப்பிட்டதற்கு கண்டனம் !
யுபிஎஸ்சி தேர்வில், சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தவர் குறித்த கேள்விக்கு தந்தை பெரியாரின் பெயரை ராமசாமி நாயக்கர் என்று சாதியுடன் அச்சிடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து கோவை காந்திபுரம் பகுதியில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் இராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 20க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு யுபிஎஸ்சி தேர்வாணையத்தைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில், சர்ச்சைக்குரிய கேள்வி நகலைக் கிழித்தெறிந்து தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்தனர்.
Next Story



