கோவை: மழையால் வேப்பமரம் சாய்ந்து சேதம் !

கோவை குனியமுத்தூர் மின் நகர் பகுதியில் பெய்த மழையால், கார்த்திக் என்பவரது வீட்டு அருகே இருந்த ஒரு பெரிய வேப்பமரம் நேற்று சாய்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
கோவை குனியமுத்தூர் மின் நகர் பகுதியில் பெய்த மழையால், கார்த்திக் என்பவரது வீட்டு அருகே இருந்த ஒரு பெரிய வேப்பமரம் நேற்று சாய்ந்து விழுந்தது. இந்த விபத்தில் மின்கம்பம், வீட்டின் கேட் மற்றும் சுற்றுச்சுவர் ஆகியவை சேதமடைந்தன. மரம் விழுந்தவுடன், கார்த்திக் உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், மரம் விழுந்ததால் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்து, உடனடியாக மரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அவர்களது துரித நடவடிக்கையால் அப்பகுதியில் மேலும் பெரிய சேதங்கள் தவிர்க்கப்பட்டன.
Next Story