வடமதுரை அருகே வாலிபர் மர்ம மரணம்

வடமதுரை அருகே வாலிபர் மர்ம மரணம்
X
வடமதுரை அருகே வாலிபர் மர்ம மரணம்
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அடுத்த அய்யலூர் to எரியோடு செல்லும் சாலையில் செட்டிகளத்தூர் ரைஸ் மில் அருகே சாலையின் ஓரத்தில் அடையாளம் தெரியாத வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். சம்பவ இடத்தில் வடமதுரை போலீசார் இறந்து கிடக்கும் நபர் யார்? என்றும் வாகனம் மோதி இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் வடமதுரை காவல் நிலைய ஆய்வாளர் கண்ணன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் இறந்தவர் எரியோடு வெள்ளனம்பட்டியை சேர்ந்த முத்துசாமி மகன் நாகராஜ்(30) என்றும் இவரின் தாய் இறந்த பின்பு தந்தை எங்கோ சென்று விட்டதால் திருமணம் ஆகாமல் பராரியாக சுற்றித்திரிந்து, குடிபோதையில் ரோட்டில் தள்ளாடி சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி கீழே விழுந்து உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது. மேற்படி சம்பவம் குறித்து வடமதுரை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story