கோவை: குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு - தடை நீட்டிப்பு

X
மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாகப் பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை நான்காவது நாளாக இன்றும் நீட்டிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான குற்றாலம் அருவிக்கு, ஆண்டு முழுவதும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாகப் பெய்து வரும் தொடர் கனமழையால் அருவியில் நீர்வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் காலை வனத்துறை ஊழியர்கள் அருவியின் நீர்வரத்தைப் பார்வையிட்டபோது, ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Next Story

