கோவை: இரண்டாவது நாளாக நிரம்பி வழியும் பில்லூர் அணை !

கோவை: இரண்டாவது நாளாக நிரம்பி வழியும் பில்லூர் அணை !
X
கோவை மற்றும் நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள பில்லூர் அணை, நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் இரண்டாவது நாளாக நிரம்பி வழிகிறது.
கோவை மற்றும் நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள பில்லூர் அணை, நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் இரண்டாவது நாளாக நிரம்பி வழிகிறது. 100 அடி உயரமுள்ள இந்த அணை, நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு வினாடிக்கு 12,000 கன அடி நீர்வரத்தைப் பெற்றது. இதனால் 86 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இரவு 11:30 மணியளவில் முழு கொள்ளளவான 97 அடியை எட்டியது. இன்றைய நிலவரப்படி, அணைக்கு வினாடிக்கு 16,140 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணைக்கு வரும் நீர் முழுவதும் மதகுகள் வழியாக பவானி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. மின் உற்பத்திக்காகவும் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தொடர் நீர்வரத்து காரணமாக பவானி ஆற்றில் இன்று இரண்டாவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
Next Story