மாடிப்படி கதவில் ஏறி விளையாடிய சிறுமி தவறி விழுந்து சாவு

மாடிப்படி கதவில் ஏறி விளையாடிய சிறுமி தவறி விழுந்து சாவு
X
திருச்சி அருகே மாடிப்படி கதவில் ஏறி விளையாடியபோது தவறி விழுந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள கீழமுல்லைக்குடி புத்தர் காலனியை சேர்ந்தவர் தர்மராஜ். இவருக்கு 2 மகள்கள் உண்டு. இதில் இளைய மகள் கிரிஷன்யா (வயது 4). இவள் நேற்று மற்ற குழந்தைகளுடன் விளையாடி கொண்டிருந்தாள். தர்மராஜின் வீட்டு மாடி படிக்கட்டில் உள்ள கதவில் ஏறி விளையாடிய போது கிரிஷன்யா தவறி கீழே விழுந்தாள். இதில் பலத்த காயமடைந்த கிரிஷன்யாவை அவளது பெற்றோர் மீட்டு திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கிரிஷன்யா நேற்று பரிதாபமாக உயிரிழந் தாள். இது குறித்து தர்மராஜ் அளித்த புகாரின்பேரில் திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story