மதுரையில் பொதுக்குழு கூட்டம் தயார் நிலை.
மதுரை உத்தங்குடி பகுதியில் வரும் ஜூன் ஒன்றாம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டமானது முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்துக்கான ஏற்பாடுகளை கவனிக்கும் பொறுப்பை வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் பொறுப்பேற்றுள்ளார். இந்த கூட்டம் நடைபெறும் இடத்தினை தினமும் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைவாக நிறைவேற்ற அறிவுரை வழங்கி வருகிறார் . தற்போது பொதுக்குழு கூட்டம் நடைபெறும் இடம் தயாராகி வருகிறது.
Next Story




