மருதம்பட்டி காலனியில் மது போதைக்கு அடிமையான வாலிபர் தூக்கிட்டு தற்கொலை.
மருதம்பட்டி காலனியில் மது போதைக்கு அடிமையான வாலிபர் தூக்கிட்டு தற்கொலை. கரூர் மாவட்டம்,மணவாடி , மருதம்பட்டி காலனி ரைஸ் மில் அருகே வசித்து வந்தவர் கார்த்திக் வயது 33. அண்மை காலமாக கார்த்திக் மது போதைக்கு அடிமையாக இருந்தார். இந்நிலையில் மே 26 ஆம் தேதி அதிகாலை 5:30- மணி அளவில் மது போதையில் இருந்த கார்த்திக் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்த அவரது மனைவி கலைச்செல்வி வயது 35 என்பவர் தனது கணவனை மீட்டு , கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கலைச்செல்வி இது தொடர்பாக காவல்துறையினருக்கு அளித்த புகாரில் , சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் , உயிரிழந்த கார்த்திக் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அதே மருத்துவமனை சவக்கிடக்கு அனுப்பி வைத்து ,இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வெள்ளியணை காவல்துறையினர்.
Next Story





