சாலையை வழிமறித்து திரியும் மாடுகள்

சாலையை வழிமறித்து திரியும் மாடுகள்
X
வாலாஜாபாத்தில் சாலையில் திரியும் மாடுகளால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாதில் இருந்து, தென்னேரி, அயிமிச்சேரி, குண்ணம் ஆகிய கிராமங்களின் வழியாக சுங்குவார்சத்திரம் செல்லும் நான்கு வழி சாலை உள்ளது. இந்த சாலையில், தென்னேரி, அயிமிச்சேரி, குண்ணம் ஆகிய கிராமங்களில் வளர்க்கப்படும் மாடுகள் தான்தோன்றி தனமாக பிரதான சாலையில் சுற்றித்திரிகின்றன. குறிப்பாக, அயிமிச்சேரி, குண்ணம், எச்சூர் ஆகிய கிராம பகுதிகளில், நான்கு வழி சாலை நடுவே இரவு நேரத்தில் படுத்து ஓய்வு எடுக்கிறது. அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மாடுகள் மீது வாகனம் மோதமல் இருக்க பிரோக் போட்டு, வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட ஊராட்சிகளில் தான்தோன்றி தனமாக சுற்றித்திரியும் மாடுகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story