அரியலூர் பேருந்து நிலையம்}மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைக்கு ஷேர் ஆட்டோக்களை இயக்க நடவடிக்கை தேவை

அரியலூர் பேருந்து நிலையம்}மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைக்கு ஷேர் ஆட்டோக்களை இயக்க நடவடிக்கை தேவை
X
அரியலூர் பேருந்து நிலையம்}மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைக்கு ஷேர் ஆட்டோக்களை இயக்க நடவடிக்கை தேவை எனக்கோரிக்கை விடுத்துள்ளார்.
அரியலூர், மே 27- அரியலூர் பேருந்து நிலையத்தில் இருந்து மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு ஷேர் ஆட்டோக்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட விவசாய சங்கத் தலைவர் என்.செங்கமுத்து கோரிக்கை விடுத்தார். அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வருவாய் தீர்வாயம் நிறைவு நாள் நிகழ்ச்சியில், ஆட்சியர் பொ.ரத்தினசாமியிடம் அவர் மனு அளித்து பேசியது: எந்த மாவட்டத்திலும் இல்லாத நிலை அரியலூரில் உள்ளது. ஒரு மருத்துவமனைக்கு பேருந்து வசதிகள் இல்லாததால் நோயாளிகள், கர்ப்பிணி தாய்மார்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு பேருந்து வசதிகள் இல்லையென்றால் கூட ஷேர் ஆட்டோக்களையாவது இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சுண்ணாம்புக் கல் ஏற்றிச் செல்லும் லாரிகள் 30 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல வேண்டும். இதனை அரசு இதழில்ல வெளியிட வேண்டும். அரியலூர் அண்ணாசிலையில் இருந்து நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளி வரையிலும், அதே போல் ரயில்வே கேட்டிலிருந்து சத்திரம் வரையிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையின் நடுவில் தடுப்புச் சுவர்களை எழுப்ப வேண்டும். ஏரி, குளங்களிலுள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். :
Next Story