மாநில அளவிலான இலவச மாதிரித் தேர்வு

மாநில அளவிலான இலவச மாதிரித் தேர்வு
X
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அறிவிக்கையின்படி, தொகுதி-1 தொகுதி-4 தேர்வுகளுக்கு மாநில அளவிலான இலவச மாதிரித் தேர்வுகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நடத்தப்படவுள்ளன என மாவட்ட ஆட்சியர் தகவல்
திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத் தன்னார்வப் பயிலும் வட்டம் மூலமாக அரசுப் பணிக்காலியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் வேலைநாடுநர்களுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அறிவிக்கையின்படி தொகுதி-1 (TNPSC GROUP-I), தொகுதி-4 (GROUP-IV) ஆகிய தேர்வுகளுக்கு மாநில அளவிலான இலவச மாதிரித் தேர்வுகள் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் முறையே 27.05.2025, 03.06.2025 07.06.2025, 24.06.2025, 02.07.2025, மற்றும் 09.07.2025 ஆகிய தேதிகளில் நடத்தப்படவுள்ளன. எனவே, TNPSC GROUP-I, GROUP-IV போட்டித் தேர்விற்குத் தயாராகும் போட்டித் தேர்வு ஆர்வலர்கள் அனைவரும் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாக தொடர்பு கொண்டு தங்களது விவரங்களைப் பதிவு செய்து, இந்த மாநில அளவிலான இலவச மாதிரித் தேர்வுகளில் பங்கு பெற்று பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Next Story