ஓசூர் அருகே நடன நிகழ்ச்சியில் போதை விருந்து.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே தென்னந்தோப்பில் நடந்த இரவு நடன நிகழ்ச்சியில் போதைப் பொருள் விற்பனை செய்ததாக பெங்களூர் ஜெ.பி. நகரை சேர்ந்த பாலாஜி (36), பீகாரை சேர்ந்த ரஜினீஷ் குமார் (42), கோவாவை சேர்ந்த இக்னிஸ் லாரன்ஸ் காமிலோ (47) ஆகிய 3 பேரை பேரிகை போலீசார் கைது செய்தனர் மேலும் விலை உயர்ந்த போதைப் பொருள்கள், கர்நாடக மதுப்புட்டிகள், கடத்தலுக்குப் பயன்படுத்திய இரு கார்களையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணையில் தட்டன பண்ணு கிராமத்தைச் சேர்ந்த விவசாய பக்தவச்சலம் என்பவருக்கு சொந்தமானது என்பதும் சுமார் நான்கு ஏக்கர் நிலத்தை பெங்களூர் கோரமங்கலத்தை சேர்ந்த பாலாஜி என்பவருக்கு வருட குத்திகையாக 2 லட்சம் ரூபாய்க்கு தந்திருப்பது தெரியவந்தது.
Next Story

