அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியாளர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தகவல்.

X
2025-ஆம் ஆண்டில் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில், அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திட, இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்யவேண்டும். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மாணவ/மாணவிகளுக்கு உதவிடும் வகையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் விருதுநகர்/அருப்புக்கோட்டை/சாத்தூர்/திருச்சுழி, மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், விருதுநகர்- 3 ஆகிய இடங்களில் சேர்க்கை உதவிமையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 8-ஆம் வகுப்பு மற்றும் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம் ரூ.50/-யை Debit Card/Credit Card/Net Banking/G-pay வாயிலாகவும் செலுத்தலாம். இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய துவங்கும் நாள் 19.05.2025 இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய கடைசிநாள் 13.06.2025 பயிற்சியில் சேரும் பயிற்சியாளர்களுக்கு விலையில்லா சைக்கிள், சீருடை, பாடநூல், வரைபடக்கருவிகள், காலணி, பஸ்பாஸ் வழங்கப்படும். மேலும் மாதந்திர உதவித்தொகைரூ.750/- மேலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் 6 முதல் 10ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்ற மாணவிகளுக்கு புதுமைப்பெண் உயர்கல்வி உறுதி திட்டம் மூலமும், மாணவர்களுக்கு தமிழ்புதல்வன் திட்டத்தின் படியும் மாதந்தோறும் ரூ.1000/- உதவித்தொகை வழங்கப்படும். மேலும்,பயிற்சி முடித்த பின், வளாக நேர்முகத்தேர்வின் மூலம் வேலைவாய்ப்பு மற்றும் அரசுஃதனியார் நிறுவனங்களில் தொழிற்பழகுநர் பயிற்சி(யுppசநவெiஉநளாip) பெற்றுத்தரப்படும். இது தொடர்பாக மேலும், விவரங்கள் பெற்றிட, முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், விருதுநகர் - 04562-252655/294382 முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், அருப்புக்கோட்டை - 04566-225800 முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், சாத்தூர் - 04562-290953 முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், திருச்சுழி– 7395873907/7010040810 உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், விருதுநகர் -04562-294755 மேற்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
Next Story

