கரூர்-அகில இந்திய கூடைப்பந்து இறுதி போட்டியில் பெண்கள் பிரிவில் சவுத் சென்ட்ரல் ரயில்வே செகந்திராபாத் அணி வெற்றி.
அகில இந்திய கூடைப்பந்து இறுதி போட்டியில் பெண்கள் பிரிவில் சவுத் சென்ட்ரல் ரயில்வே செகந்திராபாத் அணி வெற்றி கரூர் கூடைப்பந்து குழு சார்பில், எல்.ஆர்.ஜி. நாயுடு சுழற்கோப்பைக்கான, 65வது ஆண்டு அகில இந்திய கூடைப்பந்து போட்டி மே 22 முதல், திருவள்ளுவர் மைதானத்தில் நாக் அவுட் முறையில் நடந்து வருகிறது. இதேபோல கேவிபி வங்கி சார்பில் 11-ம் ஆண்டு பெண்களுக்கான சுழல் கோப்பை போட்டிகள் லீக் அவுட் முறையில் நடைபெற்று வந்தது. இன்று மாலை நடைபெற்ற பெண்களுக்கான இறுதி போட்டியில் சவுத் வெஸ்ட்டர்ன் ரயில்வே ஹூப்ளி அணியும் சவுத் சென்ட்ரல் ரயில்வே செகந்திராபாத் அணியும் மோதியது. போட்டியில் வெற்றி பெறும் முனைப்போடு இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகள் எடுத்து வந்தது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் இறுதியில் 53-க்கு 46 என்ற புள்ளிகள் கணக்கில் சவுத் சென்ட்ரல் ரயில்வே செகந்திராபாத் அணி வெற்றி பெற்றது.
Next Story






