வெள்ளகோவிலில் தேசிய நெடுஞ் சாலையில் சாலை சேதம் வாகன ஓட்டிகள் அவதி.

வெள்ளகோவிலில் தேசிய நெடுஞ் சாலையில் சாலை சேதம் வாகன ஓட்டிகள் அவதி.
X
வெள்ளகோவிலில் தேசிய நெடுஞ்சாலையில் சாலை சேதம் வாகன ஓட்டிகள் அவதி. நடவடிக்கை எடுக்க கோரிக்கை 
வெள்ளகோவில் கோவை ரோடு பழைய பேருந்து நிலையம் அருகில் தனியார் மளிகை கடை முன்பு  தார் சாலை சேதம் அடைந்துள்ளது.மேலும் இந்த சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் அதிர்ஷ்டவசமாக விபத்தில் இருந்து சிறு காயங்களுடன் தப்பித்து உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும் விபத்து ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன்பு நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.  மேலும் வெள்ளகோவில் பகுதிகளில் பல்வேறு இடங்களில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு சரி செய்யப்பட்ட பின்னர் சாலை சீரமைக்காமல் நகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறையினர் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
Next Story