திருவட்டார் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்

திருவட்டார் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்
X
குலசேகரம்
குமரி மாவட்டம் மலவிளை  பகுதியில் பரளியற்றின் குறுக்கே ஏற்கனவே இருந்த தாழ்வான குறுகிய பாலம் மழை காலங்களில் தண்ணீரில் மூழ்கி விடுவதால் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர். இது போன்று இந்த பாலம் வழியாக அருகில் உள்ள சுற்றுலா தலத்திற்கு வாகனங்கள் செல்வதற்கு வசதி இல்லாமல் இருந்தது. எனவே இங்கு உயர் மட்ட பாலம்  அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.      இங்கு அமைக்கப்படும் பாலத்தின் அகலத்திற்கு ஏற்ப பாலத்தின் இரு பக்கங்களிலும் உள்ள சாலைகளை அகலப்படுத்த வேண்டும், படித்துறை அமைக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை  வலியுறுத்தி ஊர் மக்கள் சார்பில் செருப்பாலூரில் உள்ள திருவட்டாறு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு  போராட்டம் நேற்று நடந்தது. இதற்கு மலவிளை ஊராட்சி ஊர் வட்ட மக்கள் மன்ற தலைவர் கிறிஸ்துமஸ் தலைமை வகித்தார். செல்வராஜ், வினோத், மலவிளை பாசி  உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story