அரசு சுகாதார நிலையத்தில் ஜெனரேட்டர் மாயம்

X
விளங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பத்து காணியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு மலை கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை இடித்து புதிய கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு இடையே சுகாதார நிலையத்தில் நல்ல நிலையில் இயங்கி வந்த ஜெனரேட்டரை காணவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக பத்துகாணி மலைப்பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இந்த நிலையில் தான் சுகாதார நிலையம் இருளில் மூழ்கி கிடக்கிறது. மின்சாரம் இல்லாததால் மருத்துவமனையில் குளிரூட்டியில் வைக்கப்பட வேண்டிய அவசரத் தேவைகளுக்கான பல்வேறு மருந்துகளையும் மற்ற மருத்துவமனைகளுக்கு மாற்றிவிட்டதாக கூறப்படுகிறது. உயர் சிகிச்சை பெற வேண்டி உள்ளவர்கள், அவசர மருந்துகளுக்கும் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குழித்துறை அரசு மருத்துவமனைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாயமான ஜெனரேட்டரை கண்டுபிடித்து சுகாதார நிலையத்தில் பயன்பாட்டிற்கு வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story

