ஊட்டியில் பேருந்துக்குள் மழை பெய்யும் அதிசயம் பேருந்துக்குள் குடை பிடித்து பயணம்

நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ஊட்டியில் பேருந்துக்குள் மழை பெய்யும் அதிசயம் பேருந்துக்குள் குடை பிடித்து பயணம் ஊட்டியில் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒரு அதிசயமான காட்சி, சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பேருந்துக்கள் மழை நீர் வழிந்ததால் ஒரு வாலிபர் நகரப்பேருந்துக்குள் குடையை விரித்து நின்று பயணம் செய்தது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த காட்சி ஊட்டி நகர பேருந்தில் பதிவுசெய்யப்பட்டது. பேருந்து வழக்கம்போல் கூட்டமாக இருந்தது. அந்த வேளையில் பயணம் செய்த தன்னுடனிருந்த குடையை முழுவதுமாக விரித்து அதனைதான் மேல் பாதுகாப்பாகக் கொண்டு நின்று சென்ற காட்சி, பயணிகள் சிலரால் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு, சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. ஊட்டி -தலைக் குந்தா செல்லும் பேரூந்தின் உள்ளே மழை நீர் ஒழுகுவதால் பயணிகள் அவதி பேரூந்தின் உள்ளே குடை பிடித்து பயணம் மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளதாக பேருந்தில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் தற்போது அதிகனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. ஒழுகும் பேருந்துக்குள் குடையை விரிக்க வேண்டிய நிலை ஏற்படுவது, மேல் கூரையில் இருந்து பேருந்துக்குள் தண்ணீர் கொட்டுகிறது இது போக்குவரத்து துறையின் அலட்சியத்தைக் காட்டுகிறது,” என்று பயணிஒருவர் பெரும்அதிருப்தியுடன் கூறினார். , அத்துடன் நகரப் பேருந்துகளில் அடிக்கடி காணப்படும் உள்நிலை சேதங்கள் மற்றும் மேல்மாடி துலையூடாக வரும் தண்ணீர் பிரச்சனைகள் உடனடியாக சரிசெய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
Next Story