திற்பரப்பு : அருவியில் குளிக்க தடை

X
குமரி மாவட்டத்தில் பருவ மழை தொடங்கி கடந்த நான்கு நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. மேலும் சூறைக்காற்றும் வீசி வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்து, மின்கம்பங்கள் சேதம் அடைந்து, கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன. இந்த நிலையில் இன்றும் மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதற்கு இடையில் திற்பரப்பு அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதில் அறிவியல் குளிப்பதற்கு நான்கு பகுதிகள் உள்ளன. இதில் இரண்டு பகுதிகளில் இன்று குளிக்க தடை விதிக்கப்பட்டன. தற்போது கோடை விடுமுறையானதால் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிக்கு வருகை தருகின்றனர். அறிவியல் குளிக்க தடை விதிக்கப்பட்டதால், சுற்றுலா பயணிகள் அருவியை சுற்றி பார்த்துவிட்டு சென்றனர். சிலர் அனுமதிக்கப்பட்ட பகுதியில் மட்டும் குளித்தனர்.
Next Story

